--- --:--:-- --

கொரானா நோயாளிகளுடன் இணைந்து மருத்துவர்கள் நடனம்

3

சீனாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அவர்களுடன் இணைந்து மருத்துவர்கள் நடனமாடிய வீடியோ அந்நாட்டு ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட நிலையில், இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் சீனாவின் உகான், பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

இந்நிலையில் கொரோனாவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் உகான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அவர்களுடன் இணைந்து மருத்துவர்கள் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

விதவிதமான இசை மற்றும் பாடல்களுக்கு ஏற்றவாறு நோயாளிகளுடன் மருத்துவர்கள் இணைந்து நடனமாடினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon