நீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி கோவையில் “பஸ்டே” கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

நீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி கோவையில் கல்லூரி மாணவர்கள் பட்டாசுகளை வெடித்து பேருந்து நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் அவினாசி சாலையில் பேருந்தை அலங்கரித்து, பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆட்டம் பாட்டத்துடன் பேருந்து நாளை கொண்டாடினார்.

 

அண்மையில் சென்னையில் பேருந்து நாள் கொண்டாட்டத்தின்போது பேருந்தின் மேற்கூரையில் இருந்து மாணவர்கள் கீழே விழுந்து காயமுற்றனர். இதையடுத்து பேருந்து நாளை கொண்டாட கூடாது என சென்னை உயர் நீதிமன்றமும் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்தது.


Leave a Reply