வரதட்சணையாக பணம், நகை பெறவில்லை!
500 சவரன் நகை, 4 கோடி ரூபாய் பணத்தை வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துவதாக மருமகள் அளித்த புகாரில் உண்மை தன்மை இல்லை என ஐபிஎஸ் அதிகாரியின் தந்தை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கேரளாவில் பணியாற்றி வரும் ஆனந்திற்கும், சென்னையை சேர்ந்த அருணா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் விமரிசையாக நடந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே நகை, பணம் கொடுத்தும் தன்னுடைய தந்தையின் பெயரில் உள்ள உணவகத்தை யும் வரதட்சணையாக கேட்டு கணவர் துன்புறுத்துவதாக இரு தினங்களுக்கு முன்பாக அருணா போலீசில் புகார் அளித்தார்.
இதை மறுத்துள்ள ஆனந்தின் தந்தை ராஜகுரு வரதட்சணையாக எந்த பணத்தையும், நகையையும் தாங்கள் பெறவில்லை எனக் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




