--- --:--:-- --

குரூப்-4 தேர்வு முறைகேடு – மேலும் ஒருவர் கைது

6

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் 19 பேரும், குரூப்-4 தேர்வு தொடர்பாக 19 பேரும், விஏஓ தேர்வில் 3 நபரும் என மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதன் தொடர்ச்சியாக குரூப்-4 தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் ஓம் காந்தனுடைய காரை இயக்கிய சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஓட்டுனர் மரிய லிஜோஸ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு குரூப் 4 விடைத்தாள்களை ஓம்காந்தன் எடுத்துச் செல்லும்போது இடைத்தரகர் ஜெயக்குமார் விடைத்தாள்களை மாற்றியுள்ளார். ஜெயக்குமாரின் இன்னோவா காருக்கு பாதுகாப்பாக ஓம் காந்தனுடைய காரில் சென்று மரிய லிஜோஷ்குமார் உதவியதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon