ஊர்காவல் படை காவலரை தாக்கி டிக்டாக் வீடியோ

திருவண்ணாமலை அருகே ஊர் காவலர் படை காவலரை தாக்கிய டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கரையான்செட்டியை சேர்ந்த அனிஷ்குமார் என்பவர் ஊர்க்காவல் படையில் காவலராக இருந்து வரும் நிலையில் கடந்த 10ஆம் தேதி போலீசாருடன் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

 

அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த வசந்தகுமார், கார்த்தி, உதயவேணு, பிரவீன்குமார், சூரியபிரகாஷ் மற்றும் தினேஷ் ஆகியோரை மடக்கிய அணிஷ் குமார் விசாரணை செய்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் பணிபுரிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை வழிமறித்த 6 பேரும் வாகன தணிக்கையில் ஈடுபடுகிறாயா எனக்கூறி தாக்கியதுடன் பட்டா கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.அனிஷ் குமார் அளித்த புகாரின் பேரில் 6 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


Leave a Reply