நடிகை விஜயலட்சுமி ஏதாவது என்னை எதித்து சொல்லணும்னு நினைக்குறாங்க!
மறைந்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா பெயரில் சென்னை ஆழ்வார் திருநகரில் அமைக்கப்பட்டுள்ள நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தாமல், மாநில அரசு மீது பாய்வது சரியா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன் மீது குற்றச்சாட்டை வைத்த நடிகை விஜயலட்சுமியின் பெயரை குறிப்பிடாமல் பதிலளித்த சீமான் தன்னை எதிர்த்து ஏதாவது பேசவேண்டும் என அவர் நினைப்பதாக கூறினார்.

தமக்கு எல்லோரும் எதிரி அல்ல என்றும் தான் யாரையும் எதிரியாக நினைக்கிறேனோ அவர்கள் தான் தாம் எதிரி என்றும் சீமான் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




