நடுத்தெருவில் மனைவியை இழுத்துப் போட்டுத் தாக்கிய காவல் அதிகாரி

மத்திய பிரதேச மாநிலத்தில் காவல் அதிகாரி ஒருவர் தனது மனைவியை நடுத்தெருவில் இழுத்து போட்டு தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தார் நகரில் உள்ள ஒரு காவல் நிலைய பொறுப்பாளரான நரேந்திர சூரிய வெற்றி தனது மனைவியை நடுத்தெருவில் தள்ளி தாக்குவதும் சக காவலர்கள் அவரை தடுப்பதுமான காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளன.

 

நரேந்திராவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு உள்ளதாகவும் அதனை தட்டிக் கேட்டதால் அவர் மனைவியை தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.


Leave a Reply