தேனியில் அரசு மருத்துவ கல்லூரியில் பயின்ற நர்சிங் மாணவியின் உயிர் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்த மாணவி ஒருவர் கல்லூரி விடுதி அறையில் தூக்கில் தொங்கிய படி நேற்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்து அவரது உறவினர்கள் மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி கல்லூரி முதல்வரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் சமரசம் ஏற்படாத நிலையில் மாணவியின் உறவினர்கள் மருத்துவமனை முதல்வர் குடியிருப்பு முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.