பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிய 4 இளைஞர்கள் கைது
சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டா கத்தியால் கேக் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஈக்காட்டுத்தாங்கல் கணபதி காலனியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் நேற்று முன்தினம் தனது 20 வது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார்.
அப்போது நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஒரு அடி நீளமுள்ள பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக்கை ஆகாஷ் வெட்டியதாக கூறப்படுகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் செய்த அட்டகாசத்தை தாங்கமுடியாத அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் ஆகாஷ், ஜானகிராமன், மதன் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




