--- --:--:-- --

பொதுத்தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் 5 ஆண்டு தடை

13

பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

 

அதில் தேர்வின்போது காப்பியடித்தல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் உட்பட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தேர்வர்கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டறியப்பட்டால் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon