பஞ்சாப் மாநிலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான அனிதா சிங் என்ற இளம்பெண்ணை அவரது கணவரே கொலை செய்து உடலை எரித்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். தீயில் கருகி உருக்குலைந்த நிலையில் இருந்த அனிதாவின் உடலை நைனிதால் பகுதியிலிருந்து போலீசார் மீட்டனர்.
29 வயதான அனிதா மற்றொருவருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக அவரது கணவர் ரவீந்திரன் சந்தேகித்து உள்ளார்.
இதனால் கடந்த 30-ஆம் தேதி மனைவியை நைனிதாலில் உள்ள ஒரு நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு அவரை உணவின் மயக்க மருந்து கலந்து கொடுத்து பின்னர் நண்பனின் உதவியுடன் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் இருவரும் நள்ளிரவில் அனிதாவின் உடலை காட்டுக்கு கொண்டு சென்று எரித்து விட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.