கல்குவாரிகளில் இருந்து வெடித்து சிதறிய கல்லினால் ஒருவருர் பலி
எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், இவர் கல்குவாரியில் வேலை செய்து வந்தார்.நேற்று வேலைக்கு செல்லாமல் கல்குவாரியின் அருகில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.அப்பொது கற்களை தகர்ப்பதற்காக வெடி வைக்கப்பட்டுள்ளது.வெடித்து சிதறிய கல்லில் ஒரு கல் பெருமாள் கழுத்தை அறுத்து உள்ளது.
இதனால் சம்பவ இடத்திலேயே பெருமாள் பலியானார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெருமாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். இதனை அனுமதிக்காமல் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள்,வெடி வைக்கும் போது யாரிடமும் தெரிவிப்பதில்லை எனவும், இதனால் இங்கு நிறைய குடும்பம் பாதிக்கப்படுகிறது என்றும் ,அவர்கள் இஷ்டம் போல எப்பொழுது வேனாலும் வெடியை வைக்கிறார்கள் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது என்றும் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்தனர்.
காவல்துறையினர் இந்த சம்பவத்திற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே அவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர்.இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




