நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்..! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
கோவையில் அரசு பேருந்து வளைவில் திரும்ப முயன்றபோது பக்கவாட்டில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2 பேர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நேற்று காந்திபுரம் பேருந்து நிலையத்திற்குள் பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று திரும்ப முயன்றது.
அப்போது பக்கவாட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது பேருந்து மோதியது. நிலைதடுமாறி கீழே சரிந்த இருசக்கர வாகனம் பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் பேருந்து சக்கரம் தலை மீது ஏறாமல் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஒருவர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




