ஐக்கிய அரபு அமீரகத்தில் தீ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற முயன்ற இந்திய இளைஞர் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். உமால்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த அனில் மற்றும் அவரது மனைவி நீனு மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை குடியிருப்பின் நடைபாதையில் உள்ள மின்சார பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த நீனுவும் அவரை காப்பாற்றுவதற்காக வீட்டின் படுக்கை அறையில் இருந்து ஓடிவந்த அணிலும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதில் 10% தீ காயங்களுடன் மீட்கப்பட்ட மனைவி மீனுவும், 90 சதவீத தீக்காயங்களுடன் அணிலும் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.