நோ சூடு! நோ சொரணை! திருமண பேனரில் நித்யானந்தா புகைப்படம்!

நடிகர்களின் படத்தை போட்டு திருமண பேனர்கள் அடிப்பது ஒரு ஸ்டைல் எனில், நாடே தேடிக்கொண்டிருக்கும் ஒருவரின் படத்தை போட்டு திருமண பேனர் அடித்திருக்கின்றனர் சில இளைஞர்கள். நித்யானந்தா எப்போதுமே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருப்பவர். சமீபத்தில் பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வரும் சாமியார்.

 

அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை மானசீக குருவாக ஏற்று திருமண வாழ்த்து பேனரில் புகை படத்தை அச்சிட்டு மரியாதை செலுத்தி இருக்கிறார்கள் திருச்சி மாவட்டம் லால்குடி சேர்ந்த சில இளைஞர்கள்.

திரை கலைஞர்களின் படங்களை தவிர்த்து நித்தியானந்தாவின் படத்தோடு பேனர் அடித்தது ஏன் எனக் கேட்டபோது அவரது வெகுளியான சிரிப்பும் வித்தியாசமான நடவடிக்கைகளும் தங்களை கவர்ந்ததாக அந்த இளைஞர்கள் கூறியுள்ளனர். நோ சூடு , நோ சொரணை என்ற பொன்மொழியோடு பேனர் அடித்திருக்கும் இந்த இளைஞர்கள் நித்தியானந்தாவின் கைலாசாத்திற்கு செல்வதே தங்களின் கனவு என்றும் கூறியுள்ளனர்.

 

என்றைக்குமே தீராத நித்தியானந்தாவின் குதூகலம் தான் தங்களுக்கு எனர்ஜி டானிக் என வார்த்தைக்கு வார்த்தை உருகிய இளைஞர்கள் பேட்டி கொடுக்க முடியுமா என்றதும் தலைவன் வழியை பின்பற்றி தலைமறைவாகி விட்டார்கள்.

 

நித்யானந்தாவின் பல பேச்சுக்கள் வைரலாகி கொண்டிருக்கும் நிலையில் அவற்றை இளம் பெண்கள் உட்பட பலர் டிக் டாக் செய்தும் வெளியிட்டுள்ளனர். பலர் நித்தியானந்தாவின் படங்களை ஸ்டேட்டஸ்சாக வைத்திருக்கும் நிலையில் தற்போது திருமண விழா பேனரில் இடம்பெற தொடங்கியிருக்கிறார் நித்யானந்தா.


Leave a Reply