டாஸ்மாக் பார்-க்கு துணிச்சலுடன் பூட்டு போட்ட இளம்பெண்
சென்னை அருகே 24 மணி நேரம் மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் பாருக்கு துணிச்சலுடன் தனிநபராக சென்ற இளம்பெண் ஒருவர் அதற்கு பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தலைவர் கலைச்செல்வி என்பவர் சமூகப் பிரச்சினைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
இவர் அப்பகுதியில் முறைகேடாக இயங்கிவந்த ஐந்து பார்களை செல்போன் மூலம் முகநூல் பக்கத்தில் நேரலையாக வீடியோ வெளியிட்டு மூட செய்துள்ளார். இந்நிலையில் பட்டாபிராமன் காவல் நிலையம் அருகே உள்ள பார் ஒன்றில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்வதை அறிந்த கலைச்செல்வி அதன் கதவை மூடி பூட்டு போட்டுள்ளார்.
பின்னர் மது விற்பனை செய்தவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து சாவியை ஒப்படைத்து சென்றுள்ளார். இதுபோன்று தங்கள் பகுதிகளில் முறைகேடாக மது விற்பனை செய்திடும் மது கூடங்களை எதிர்த்து துணிச்சலுடன் பெண்கள் போராட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




