--- --:--:-- --

4 மாதங்களில் 26 கிலோ வரை எடை குறைத்த சானியா மிர்சா!

4

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா நான்கு மாதங்களில் 26 கிலோ வரை எடை குறைத்து பிட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா குழந்தை பேறுக்காக இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.

 

குழந்தை பெற்ற பின் உடல் பருமன் அதிகரித்து காணப்பட்ட சானியாவை மீண்டும் டென்னிஸ் களத்தில் பார்க்க முடியாது என அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்தநிலையில் விருவிருவென எடை குறைப்பில் ஈடுபட்ட சானியாமிர்சா மீண்டும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். இரண்டு வருடங்களுக்கு பின் விளையாடிய முதல் போட்டியிலேயே அவர் பட்டம் வென்று அசத்தினார்.

தமது எடை குறைப்பு குறித்து சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 89 கிலோவிலிருந்து 63 கிலோவாக எடையைக் குறைத்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களில் மீண்டும் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் மாறியதாக சானியா கூறியுள்ளார்.

 

நம்மால் முடியாது என்று எத்தனை பேர் கூறினாலும் அதை பொருட்படுத்த கூடாது என்றும், என்னால் முடியும் என்றால் எவராலும் முடியும் என்றும் தமது பதிவில் சானியாமிர்சா குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon