சின்னத்திரை நடிகை சுபர்ணா ஜாஸ் தற்கொலை

மேற்குவங்கத்தில் இளம் சின்னத்திரை நடிகையான சுபர்ணா ஜாஸ் தற்கொலை செய்து கொண்டார். பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்த சுபர்ணா ஜாஸ் அண்மைக்காலமாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டது. இளம் நடிகையான சுபர்ணா ஜாஸ் மரணம் பெங்காலி சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply