கனரக வாகனங்களின் ஆயுள் 15 ஆண்டுகளா? மத்திய அமைச்சரின் அறிவிப்பால் சேலம் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி!!
15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் கனரக வாகனங்கள் காலாவதியானதாக அறிவிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் கனரக வாகனங்களை காலாவதியானதாக அறிவிக்க மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ ஒன்றில் தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியபொழுது,15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் வாகனங்களை ஓரம் கட்டுவது வெளிநாடுகளுக்கு பொருந்தும். ஆனால் இந்தியாவில் ஓடும் லாரிகளில் 40%, 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் வாகனங்கள் தான் உள்ளது.
திடீரென்று இப்படி அறிவிப்பை வெளியிட்டால் பழைய வாகனங்களை அழித்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்குவதற்கு திண்டாட்டம் ஏற்படும் என்றும்,இந்த பழைய கனரக வாகனங்களை நம்பித்தான் பல குடும்பங்கள் தற்போது வாழ்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




