கெஜ்ரிவால் போல் வேடமணிந்த 2 வயது குழந்தை! வைரல் போட்டோ
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் கெஜ்ரிவால் போல் வேடம் அணிந்த இரண்டு வயது குழந்தை இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.
டெல்லி தேர்தல் வெற்றியை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போல் வேடமிட்ட இரண்டு வயது சிறுவனின் புகைப்படம் பகிரப்பட்டு மப்ஃப்ளர் மேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து அந்த சிறுவனின் மேலும் சில புகைப்படங்களும், வீடியோக்களும் இணையவாசிகளால் பகிரப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




