--- --:--:-- --

53 வினாடிகளில் 35 மாநிலங்களின் பெயர்களை மழலையில் கூறி அசத்தும் சிறுவன்

3

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தலைநகரங்களை 53 வினாடிகளில் சொல்லி அசத்தி வரும் 3 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் டெனிதா இவர் தனது மகன் ஜெரோமியாயாவுக்கு சிறு வயது முதலே மாநிலங்களின் தலைநகரங்களை சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.

 

அதை அப்படியே பிடித்துக் கொண்ட சிறுவன் தற்போது 35 மாநிலங்களின் பெயர்களையும் தவறில்லாமல் சொல்லி வருகிறார். சென்னையில் நடைபெற்ற கலாம் விஷன் 2020 என்ற நிகழ்ச்சியில் ஜெரோமியா 53 வினாடிகளில் 35 மாநிலங்களின் பெயர்களை சொல்லி அசத்தியுள்ளார்.

 

சிறுவனின் சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 3 வயது சிறுவனின் அசாத்திய செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon