--- --:--:-- --

அரவிந்த் கெஜ்ரிவாலின் வாழ்க்கை பயணம்!

2

அரசு அதிகாரியாக இருந்து மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீவிர ஆவலில் ஒரு கட்சியை தொடங்கி மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகரில் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்திய அரசியலில் புதிய கட்சி தொடங்குவது அதிசயமல்ல, வியப்பானது அல்ல.

 

ஆனால் வழக்கமான அரசியலாக இல்லாமல் மாற்று அரசியலை முன்வைத்து வெற்றி பெறுவது வியப்பை தரக்கூடியத, விந்தையானது. அப்படி ஒரு ஆச்சரியமான கட்சியான ஆம் ஆத்மி. இந்த கட்சியின் கதாநாயகன் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது டெல்லி முதலமைச்சர். அரசியல் கட்சி தொடங்குவதற்கு அரசியலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

அரசு அதிகாரியாக இருந்தால் கூட கட்சி ஆரம்பித்து வெற்றி பெற இயலும் என்று உலகுக்கு காண்பித்தவர். அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தது ஹரியானா மாநிலத்தில் ஒரு சிறு நகரத்தில், படிப்பில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் ஐஐடி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி கரக்பூரில் மெக்கானிக் இன்ஜினியரிங் படித்தார். ஐஐடி படிப்பு முடிந்ததும் அவருடைய நண்பர்கள் பலர் அமெரிக்காவிற்கு பறந்தனர்.

 

அப்போது அவருக்கு வயது 21. அச்சமயம் தான் அவருடைய வாழ்க்கை மாறத் தொடங்கியுள்ளது. அடித்தட்டு மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதை விட அரசுத் துறையில் வேலை கிடைத்தால் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று கருவியை கெஜ்ரிவால் ஐஏஎஸ் தேர்வுக்கு படிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

 

டாடா நிறுவன பணியைத் துறந்தார். அப்போது அவர் எடுத்த இந்த முடிவு மிகவும் துணிச்சலானது. இந்தச் சூழலில் கொல்கத்தாவில் அன்னை தெரசாவை சந்தித்தார் கெஜ்ரிவால் ஆதரவற்றோர் இல்லத்தில் பணிபுரிய விரும்புவதாக கூறியுள்ளார். அன்னை தெரசா அவரை ஆசிரமத்தில் தன்னார்வ தொண்டராக சேர்த்துக்கொண்டார்.

 

ஐடிஐ படித்துவிட்டு அன்னை தெரசா இல்லத்தில் ஆதரவற்றோர்க்கான பணி செய்துள்ளார் கெஜ்ரிவால். ராமகிருஷ்ணா மடங்களில் தொண்டாற்றி அனுபவமும் கெஜ்ரிவாலுக்கு உண்டு. சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுகளில் எழுதிக்கொண்டிருந்தார். அதில் தேர்ச்சி பெற்று அவருக்கு ஐ‌ஆர்‌எஸ் பணி கிடைத்தது.

 

முதல் வேலை வருமான வரித்துறையில் வேலை பார்த்துக்கொண்டே சமூகப் பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கினார். ஒரு கட்டத்தில் அரசு பணி அலுப்பு தட்ட நீண்ட விடுமுறை எடுத்தார். சிறிது காலத்திற்குப் பின்னர் மீண்டும் பணியில் சேர்ந்தார். பதினோரு ஆண்டுகள் அரசு பணியில் இருந்த கெஜ்ரிவால் 2006இல் ஐஆர்எஸ் வேலையை ராஜினாமா செய்தார். பொதுப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் முழுநேர போராட்டக்காரர் ஆக மாறினார்.

 

கெஜ்ரிவால் இந்த காலகட்டத்தில் அவருக்கு திருமணமும் நடந்தது. குடிமைப்பணி பயிற்சியின் போது தன்னுடன் பயிற்சிபெற்ற சுமிதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் வளர்ச்சிக்கு அவர் நடத்திய பல தன்னார்வ அமைப்புகள் உதவின.எனவே தற்போது மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகரில் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon