இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி..! ‘தேங்க் யூ டெல்லி’ என டுவீட்டிய பிரசாந்த் கிஷோர்!!!
டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றி பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர், இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றியதற்கு தேங்க் யூ டெல்லி என டுவீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலின் போது வெற்றி பெற பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்து அரசியல் சாணக்கியர் என புகழப்படுபவர் பிரசாந்த் கிஷோர் .2014-ல் மோடி பிரதமராக முதன் முதலில் வியூகம் வகுத்துக் கொடுத்து பிரபலமானார்.

பின்னர் பீகாரில் நிதீஷ் யாதவ், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு ஆலோசனை வழங்கி வெற்றிக்கு காரணமாக இருந்தார். இதனால் பிரசாந்த் கிஷோரின் மவுசு அதிகரித்து விட்டது.
மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கிஷோருக்கு வலைவீசியுள்ளார். அது மட்டுமா? தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, திமுகவும் இவரை முன்கூட்டியே புக் செய்துள்ளது பெரும் பரபரப்பாகியுள்ளது. இதனால் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை விமர்சனம் கூட செய்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும், அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததும் சாட்சாத் பிரசாந்த் கிஷோர் தான். இன்று வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று மீண்டும் கெஜ்ரிவால் முதல்வராகிறார்.
இந்த தேர்தல் முடிவு குறித்து பிரசாந்த் கிஷோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





