--- --:--:-- --

டெல்லி தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மி : 62, பாஜக : 08 கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள் குவிகிறது!!

Screenshot_2020-02-11-14-50-38-606_com.android.chrome

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்ததற்கும் மேலாக ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலை பெற்று 62 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது.

 

பாஜகவோ முதலில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருந்தாலும்,08 இடங்களை மட்டுமே கைப்பற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் அர்விந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வது உறுதியான நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

 

70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு கடந்த 8-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் மத்தியில் ஆளும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டாலும், கடும் போட்டியை தராமல் ஒப்புக்கு நின்றதாகவே தெரிந்தது.

 

கடந்த 8-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எண்ணிக்கையில் ஆரம்பத்திலேயே ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது.

 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மெய்யாகும் வகையில் ஆம் ஆத்மி அமோகமாக வெற்றியை குவித்து வருகிறது. ஆரம்பத்தில் 50 இடங்கள் வரை முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மி, பாஜக முன்னிலையில் இருந்த பல தொகுதிகளில் அக்கட்சியை பின்னுக்குத் தள்ளி 62 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

 

இதனால் இந்த முறையும் பாஜக கணக்கு ஒற்றை இலக்கம் தான் எனத் தெரிகிறது.

 

தற்போதைய முன்னணி நிலவரம் :

மொத்த இடங்கள் : 70

ஆம் ஆத்மி ஆட்சி : 62

பா.ஜ.க. : 08

காங்கிரஸ் : 00

 

கடந்த 2015-ல் பெற்ற வெற்றியைப் போன்றே இம்முறையும் வெற்றியை குவித்து வருவதால், அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் அரியணை ஏறுகிறார். கெஜ்ரிவால் தான் போட்டியிட்ட புது டெல்லி தொகுதியில் அமோக வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

 

அதே போல் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்கர்கள் பலரும் முன்னிலையில் உள்ளனர். ஆனால் டெல்லி பாஜக முக்கிய தலைவர்கள் பலரும் பின்தங்கி உள்ளார். காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

 

“அமோக வெற்றி பெற்று மீண்டும் டெல்லியில் ஆட்சிக் கட்டிலில் அமரும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்”

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon