தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்ததாக நாடகம்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெற்றோரே குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரியாபட்டியில் அரசுப்பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ் , சுஷ்மிதா தம்பதியின் குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக புகார் எழுப்பப்பட்டது.

 

குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதை அறிந்த காவல்துறை இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது தந்தை அமல்ராஜிற்கு குழந்தை பிறந்தது பிடிக்கவில்லை என்பதால் மனைவியுடன் சேர்ந்து தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.

 

இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர், குழந்தையின் தாத்தா, பாட்டி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


Leave a Reply