தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேரையும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் மீது கடந்த மே மாதம் 24 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும்,இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு உள்ளதால் அமர்வு நீதிமன்றத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சேலம் மத்திய சிறையிலிருந்து கோவை நீதிமன்றத்திற்கு இன்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
மேலும்,இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி நீதிமன்ற காவலை வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.மேலும்,இவ்வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றியும் நீதிபதி சக்திவேல் உத்தரவு பிறப்பித்தார்.
பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.