பள்ளிக் குழந்தைகளை இறக்கிவிட்டு உயிரைவிட்ட ஆட்டோ ஓட்டுநர்
தூத்துக்குடியில் பள்ளி குழந்தைகளை தனது ஆட்டோவில் ஏற்றி வந்த முதியவர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே குழந்தைகளை பாதுகாப்பாக இறக்கிவிட்டு ஆட்டோவிலேயே உயிரிழந்தார்.
அங்குள்ள ஹோலிகிராஸ் பள்ளியில் படிக்கும் மாணவிகளை அன்றாடம் ஆட்டோவில் அழைத்து வரும் ஆட்டோ ராமலிங்கம் என்ற அந்த முதியவர் வழக்கம்போல மாலை குழந்தைகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். சிறிது தூரத்தில் ராமலிங்கத்திற்கு உடல் முழுவதும் வேர்த்து மூச்சுத்திணற தொடங்கியுள்ளது .
மாரடைப்பின் அறிகுறி என்பதை உணர்ந்த அவர் உடனடியாக ஆட்டோவை ஓரம்கட்டி குழந்தைகளை இறக்கி விட்டுள்ளார். அதன்பின்னர் சில வினாடிகளில் ஆட்டோவில் உட்கார்ந்த நிலையிலேயே அவரது உயிர் பிரிந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




