ரஷ்ய விமானம் ஒன்று ஏரில் பழுது ஏற்பட்டதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்ட போது தரையுடன் மோதியது. ஆயினும் அந்த விமானத்தில் இருந்த 94 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
போயிங் 737 விமானம் மாஸ்கோவை நோக்கி 100 பேருடன் நோனி சிங் விமானத்தில் இருந்து புறப்பட்ட வேகத்தில் உடனே அவசரமாக தரையிறங்க அனுமதி கோரியது. விமானத்தை தரை இறக்க முயன்றபோது அதன் பின்பக்கம் எதிர்பாராதவிதமாக தரையுடன் மோதியதில் விமானம் தரை தட்டி விழுந்தது. பயணிகள் யாருக்கும் பெரிய காயங்கள் இல்லாத போதும் விமானத்தில் இருந்து வெளியே வருவதற்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.