--- --:--:-- --

பட்டாக் கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது

1

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டா கத்தியால் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித் குமார் தனது பிறந்தநாளை நண்பர்கள் விஜய்-அஜீத் உள்ளிட்டோருடன் முக்கிய சாலையில் கொண்டாடியுள்ளார்.

 

அப்போது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் சாலை சென்ற பொதுமக்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

 

இதையடுத்து அஜீத், விஜய், கலைவாணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித், கலைவாணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விஜய் உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon