வரப்போகும் கிஸ் டே, ஹக் டே! என்னலாம் பண்ண காத்து இருக்காங்களோ! சிங்கில்ஸ் புலம்பல்!

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அலைபாயுதே படத்தில் மாதவன், ஷாலினியிடம் கூறும் இந்த வசனத்தை அனேகமாக எல்லா காதலர்களும் தங்கள் நிஜவாழ்க்கையில் பயன்படுத்தி இருப்பார்கள். அந்த வகையில் காதலர்கள் தங்கள் காதலை சொல்ல பழமையில் புதுமை புகுத்தி பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர்.

 

சிங்கில்ஸ்கள் கமிட் ஆவதற்கு காரணமாக கருதப்படுவது இந்த பிப்ரவரி மாதம் தான். பிப்ரவரி என்றவுடனே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம். உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் அதற்கு தயாராகும் விதமாக ஒரு வாரம் முன்பதாகவே காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது.

 

” சின்ராச கையிலேயே புடிக்க முடியாது” என்ற திரைப்பட வசனத்திற்கு ஏற்ப காதலர்களை இந்த ஒரு வாரத்திற்கு கையிலேயே பிடிக்க முடியாது. பிப்ரவரி 7ஆம் நாள் ரோஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. காதலர் அடையாளமாக திகழும் ரோஜா மலர்களை காதலிப்பவர்களுக்கு வழங்கி மகிழும் நாள்தான் இந்த ரோஸ் டே. பிப்ரவரி எட்டாம் தேதி காதலை முன்மொழியும் நாளாகவும், பிப்ரவரி 9ஆம் தேதி சாக்லேட் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

 

ஸ்வீட் எடு கொண்டாடு என்பதைப்போல பிப்ரவரி 9ஆம் தேதி சாக்லேட் தினமும், காதலர் தின பரிசுகளில் ஆல் டைம் பேவரெட்களான டெடி பியர் தினம் கொண்டாடும் விதமாக பிப்ரவரி 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்குறுதி தினமாகவும், பிப்ரவரி 12ஆம் தேதி கட்டியணைக்கும் தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. காதலர் தினத்திற்கு முந்தைய தினமான பிப்ரவரி 13ஆம் தேதி கிஸ் டே ஆகவும், வாரத்தின் கடைசி நாளான பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

 

இப்படி ஒரு வாரம் முழுக்க காதலர்கள் பிஸியாக இருக்க சிங்கிள்ஸ்கலோ வழக்கம்போல சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் தலைதெறிக்க விட்டு வருகின்றனர். சாதி, மதம், பேதம் இன்றி ஒரே நாளில் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் இந்த காதலர் தினத்தை காதல் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது.


Leave a Reply