மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வெவ்வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது
கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர், இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டு வந்துள்ளார். கடந்த 8ம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பி வரும் வழியில் விபத்தில் சிக்கியுள்ளார், அவரை சேலம் அரசு பொது மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்தது உறுதியானது.
பின் உடல் உறுப்பு தானம் பற்றி மருத்துவர்கள் அவர் பெற்றோரிடம் கூறியுள்ளனர். உடனே பெற்றோர்களும் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் அளித்துள்ள நிலையில்,பிரேத பரிசோதனை நடந்து உடல் உறுப்புகள் தனித்தனியாக அகற்றப்பட்டன.பின் சென்னை குளோபல் மருத்துவமனைக்கு இருதயம் கொண்டு செல்லப்பட்டது.
ஒரு சிறுநீரகம் கோவை உள்ள கே. எம். சி .ஹெச் மருத்துவமனைக்கும் ,மற்றொன்று அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.நுறையிரல் மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.6 மணி நேரத்துக்குள் இதய அறுவை சிகிச்சை முடிக்கப்பட வேண்டும் என்பதால் இருதயம் விமானம் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல 40 நிமிடங்கள் ஆகும், ஆனால் போலீசாரின் உதவியுடன் சுமார் 15 நிமிடத்திற்கு முன்பாகவே பொது மக்களின் ஒத்துழைப்பால் இருதயம் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.சோகத்தை ஏற்படுத்திய சுரேந்தர்யின் மரணம்,அவர் இறந்த பின்பும் அவரால் நான்கு பேர் உடலுறுப்பு பெறப்பட்டு மறு வாழ்வு வாழ்வது அவரது பெற்றோர்க்கும்,குடும்பத்திற்கும் சுரேந்தர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




