லஞ்சம் பெற்றுக் கொண்டு செயல்படும் அரசு மருத்துவமனை
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் தலைமையில் மருத்துவமனை டீன் அலுவலகத்தில் உள்ள வார்டுகளில் பத்மாவதி நிறுவனத்தைச் சேர்ந்த துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு பதிலாக வேலை செய்து வைத்திருக்கின்றனர்.
அரசு மருத்துவமனை செவிலியர்கள் சரிவர வேலை செய்யாமல் இருப்பதே பத்மாவதி நிறுவனத்தை சேர்ந்த துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணி ஊழியர்கள் வேலை செய்ய காரணமாக இருக்கின்றது. அங்கு வேலை செய்யும் ஊழியர்களும் நோயாளிகளுக்கு குல்கோஸ் போடுவதற்கும், ஊசி போடுவதற்கும் லஞ்சம் பெறுகின்றனர்.

எனவே அதிக பணம் செலவு செய்யாமல் முடியாமல் இருக்கும் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வர காரணம் இங்கு இலவசமாக இருக்கும் என்பதால் தான். ஆனால் இவ்வாறு லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலை செய்வது அவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே இந்த துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனையில் நடக்கும் குற்றங்களை சரி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




