போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகை யார் தெரியுமா? மலர் டீச்சர்

தமிழ் ,மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வெவ்வேறு துறைகளில் பிரபலமாக திகழும் முப்பது வயதிற்குள் இருக்கும் டாப் இந்தியர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான போர்ப்ஸ் அண்மையில் வெளியிட்டது.

 

இந்த டாப் 30 இந்தியர்களின் பட்டியலில் இடம் பிடித்த ஒரே நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகை சாய் பல்லவி. இவர் பொழுதுபோக்கு துறை பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சாய்பல்லவி போர்ப்ஸ் அளிக்கும் கௌரவத்தை பேருவகையுடன் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

 

தற்போது நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் பரத பருவம் ஆகிய தெலுங்கு படங்களில் சாய்பல்லவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply