கொரானா வைரசிற்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசாக அளிக்க உள்ளதாக நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார். உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரானா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஹாங்காங் நாட்டை சேர்ந்தவரும், நடிகருமான ஜாக்கிசான் இந்த கொடூர வைரசை தோற்கடிக்க விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் முக்கியம் என்பதை தம்மை போன்ற பலரும் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தனிநபரோ அல்லது ஒரு அமைப்போ வைரசுக்கு மருந்து கண்டு பிடித்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக ஜாக்கிசான் தெரிவித்திருக்கிறார்.