திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடுகிறார் – பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டு !!!
குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடுகிறார் – பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் ராமர் கோவில் அறக்கட்டளை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டுமென்பது நீண்ட கால கோரிக்கை எனவும், இதனால் ஒட்டு மொத்த இந்தியர்கள் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் எனவும் கூறினார்.
மேலும்,இன்னும் சில ஆண்டுகளில் ராமர் கோவில் கட்டப்படும் என தெரிவித்தார். அனைத்து இந்திய மொழிகளும் கடவுளிடம் செல்லும் வழியாக உள்ளது எனவும், தமிழ், சமஸ்கிருதம் என பிரித்து பார்க்க வேண்டாம். பாஜக அனைத்து மொழிகளையும் சமமாக பார்க்கிறது எனவும் அவர் கூறினார்.
மேலும்,குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடுவதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்ததை வரவேற்கிறோம் எனவும், அடுத்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சிஏஏ, காஷ்மீர், ராமர் கோவில் குறித்து பாஜக பிரச்சாரம் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும்,நாட்டில் பொருளாதார மந்த நிலை பலமுறை வந்துள்ளது எனவும், பொருளாதார மந்த நிலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார். பிரசாந்த் கிஷோர் வட இந்தியரா,தென் இந்தியரா,திராவிடரா, ஆரியரோ என ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் எனவும், டெல்லி தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும்,ஜெயக்குமார் பா.ஜ.க தலைவர் அல்ல. கூட்டணி கட்சிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கும் எனவும், அதிமுக – பா.ஜ.க இடையே சுமூகமான உறவு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




