ராஜஸ்தான் மாநில தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகம் லிமிடெட் (ரிகோ) (ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னோடி ஏஜென்சி), கோவையில் முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது. கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலஅரசின் புதிய தொழில் கொள்கை மற்றும் ஊக்கம் போன்றவை கோவையில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு விளக்கம் தரப்பட்டது. ராஜஸ்தான் முதலீட்டு மேம்பாட்டு மேம்பாட்டு திட்டம் 2019 மூலம், எவ்வாறு உதவி செய்ய முடியும் என்ற தகவலும் அளிக்கப்பட்டது.
ரிகோ முதுநிலை துணை மேலாளர் எஸ். கே குப்தா, துணை பொது மேலாளர் தருண் கே ஜெயின் (நிதி), ஆகியோர் சூரிய ஒளி, காற்று போன்ற மரபுசாரா மின்சக்திகளுக்கான வாய்ப்புகள், நகை கற்கள், ஜவுளி, செராமிக் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கைவினை பொருட்கள் மற்றும் வாகனங்கள் போன்ற துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கினர். மேலும், தண்ணீர், அடிப்படை கட்டமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து விளக்கினர்.
ஜெயின் இன்டர்நேஷனல் வர்த்தக அமைப்பின் கோவை பிரிவு தலைவர் ரமேஷ் பாப்னா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கோவை மேலாண்மை சங்கம், ராஜஸ்தான் பவுண்டேஷன்,பிக்கி எப்.எல்.ஓ, கோவை நல சங்கம், டை மற்றும் ஜெயின் இன்டர்நேஷனல் வர்த்தக அமைப்பு ஆகியவை இணைந்து சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.ராஜஸ்தானில் முதலீடு செய்வதால், கோவை தொழில் முனைவோருக்கு புவி அமைப்பு ரீதியான பயன்கள், கோவைக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய், லாபம், அதனால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் மறுமலர்ச்சி போன்றவைகளை பங்கேற்ற அனைவரும் பாராட்டினர்.