--- --:--:-- --

மகளின் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 100 சவரன் நகை கொள்ளை

6

சேலம் ரயில்வே அதிகாரி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 100சவரன் நகையையும் ,15ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.விரைவில் திருமணம் ஆக உள்ள இவரின் மகளுக்கு இவர் 100 சவரன் நகையை சேர்த்துள்ளார்.

 

சென்னையில் உள்ள உறவினர்களுக்கு தன் மகளின் திருமணத்திற்காக பத்திரிக்கையை அளிக்க சென்றுள்ள போது,வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இவர் வீட்டை உடைத்து உள்ளே உள்ள நகை ,பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.சென்னையில் இருந்து திரும்பி வந்து வீட்டைப் பார்த்த பொழுது நகை கொள்ளை அடிக்கப்பட்டதை பார்த்த இவர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானார் .

 

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தபோது காவல்துறையினர் அங்கு அருகில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சியையும்,கைரேகை நிபுணர்களை கொண்டு கொள்ளையர்களின் கைரேகைகளையும் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.விரைவில் கொள்ளையர்கள் பிடிக்கப்படுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon