--- --:--:-- --

தாயை கொன்றுவிட்டு அந்தமானுக்கு ஆண் நண்பருடன் சென்ற பெண் என்ஜீனியர்

9

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெற்ற தாயை கொன்று விட்டு அந்தமானுக்கு ஆண் நண்பருடன் விடுமுறையை கழிக்க சென்ற பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

 

33 வயதான பெண் பொறியாளர் அம்ருதா சந்திரசேகர் ஹைதராபாத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால் அங்கு செல்லப் போவதாக தெரிவித்து வந்துள்ளார். கடந்த திங்கள்கிழமை காலை உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த சகோதரரை முதலில் கத்தியால் குத்தி கம்பியால் தாக்கி உள்ளார்.

 

பின்னர் தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து நண்பர் ஸ்ரீதர் ராவுடன் அந்தமானுக்கு சென்றுவிட்டார். அவர்கள் 2 பேரையும் அந்தமான் போலீசார் உதவியுடன் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon