இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக தாலிகட்டும் வீடியோ

கர்நாடகா மாநிலம் ஹஷனில் இளம்பெண்ணை கடத்தி ஓடும் காரில் திருமணம் செய்து பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட இளைஞன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மனு குமார் என்ற அந்த நபர் தையல் வகுப்புக்கு சென்று விட்டு திங்கட்கிழமை மாலை பேருந்து நிறுத்தத்தில் நின்ற உறவுக்கார இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தினார்.

 

ஹசன் – பெங்களூர் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருக்க இளம் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். பெண்ணின் அழுகை குரல் வெளியே கேட்காமல் இருக்க பாட்டை சத்தமாக ஒலிக்க செய்தார். திருமண வீடியோ காட்சியை ஃபேஸ்புக்கில் மனு குமார் வெளியிட்டதில் அது வைரலானது.

 

இதை வைத்து மனு குமாரையும், அவரது நண்பர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். பெண்ணின் தந்தை தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply