ஒரு கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இன்றுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை

கோவையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் ஆர்டரின் பெயரில் தங்கத்தை செய்து விற்று வருகிறார். இவரின் மகன் ஹரிஷ் எல்ஐசி ஏஜென்டாக உள்ளார்.இவரின் மகன் கடந்த மாதம் 9ஆம் தேதி ஐதராபாத்தில் தங்கத்தை விற்று அதன் பணத்தை 10ஆம் தேதியன்று சொகுசு பேருந்து ஒன்றில் எடுத்து வந்த பொழுது ,சேலம் மாவட்டம் சங்ககிரி சுங்கச்சாவடியில் பேருந்து பத்து நிமிடம் நின்று உள்ளது.

 

அப்பொழுது கழிவறைக்குச் சென்று பத்து நிமிடங்கள் கழித்து வந்து பார்த்த பொழுது அவரின் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் காணாமல் போயுள்ளது. அதைதெரிந்த அவர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.பின்பு காவல்துறையிடம் புகார் தெரிவித்த பின்னர் காவல்துறையினர் தீவிர சோதனையில் 3 தனிப்படை உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

 

சொகுசு பேருந்து ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட பொழுது அங்கு உள்ள சிசிடிவி காட்சி காட்சியையும் இங்கு சுங்கச்சாவடியில் நின்று பொழுது அங்குள்ள சிசிடிவி காட்சியையும் சோதனை செய்துள்ளனர்.இரண்டு இடங்களை சோதனை செய்த பொழுதும் இன்றுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை.பின்பு ஐதராபாத்திலிருந்து அவரு கூட வந்த பயணிகளிடம் விசாரித்துள்ளனர்.இன்னும் ஒரு சிலரிடம் விசாரிக்காத நிலை உள்ளது.

 

மேலும் அவர்களிடம் விசாரித்த பின்பு கொள்ளை சம்பவம் பற்றிய முழு விவரம் தெரியவரும் என்றும் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே சம்பவம் போல் சேலம்- சென்னை ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட பின்பு கொள்ளைக்காரர்கள் பிடிபட்டனர், என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply