கடந்த சில மாதங்களாக சேலம் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள கடைகளிலும் பேருந்து நிலையத்திலும் தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது, இதையடுத்து ராதாகிருஷ்ணன் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் தரமற்ற பொருட்களை விற்பது,அதே பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலையை சேர்த்திருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வாழ்க்கையடுத்து அந்த வழக்கிற்காக அறிக்கையை தாக்கல் செய்ய கடை கடையாக ஏறி அனைத்து தரமற்ற பொருட்கள்,தின்பண்டங்கள் நொறுக்குத்தீனிகள் என அனைத்தையும் வாங்கினார். ஆனால் ஒன்றுக்கு கூட ரசீது கொடுக்கப்படவில்லை.மேலும் ஒரு பேருந்தில் ஏறி அவர் அங்கு உள்ள முதலுதவிப் பெட்டியை பார்த்துள்ளார்.
ஆனால் முதலுதவி பெட்டி காலியாக உள்ளது. அந்த பேருந்தில் உள்ள நடத்துனர் பேச்சை அணியவில்லை.இது சம்பந்தமாக கடை முதலாளிகயளிடம் கேட்ட பொழுது அவர்கள் தரமான பொருட்கள் தான் விற்கப்படுவதாகவும் எந்த காலாவதியான பொருட்கள் விற்க படவில்லை என்றும் கூறினார்கள்.