திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்
திமுக முதன்மை செயலாளராக திருச்சி மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திமுகவில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு அடுத்து முக்கியப் பதவி முதன்மை செயலாளர் பதவியாகும். இப் பொறுப்பை டி.ஆர்.பாலு வகித்து வந்தார். தற்போது நாடாளுமன்ற திமுக எம்.பி.க்கள் குழுவின் தலைவராகவும் டி.ஆர்.பாலு செயல்பட்டு வருவதால், அவர் வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் முதன்மை செயலாளராக திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரான கே.என்.நேரு, திருச்சி மாவட்டச் செயலாளராக பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்திலேயே திருச்சி மாவட்டத்தில் தான் திமுக அமோக வெற்றியை பதிவு செய்தது. இதற்கு கே.என்.நேருவின் கட்சிப் பணிதான் காரணம் என்பதால் அதற்குப் பரிசாக முதன்மைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




