--- --:--:-- --

திருப்பூரில் குடியரசு தினவிழா : ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தேசிய கொடியேற்றினார்..! 515 பேருக்கு நலத்திட்ட உதவி!!

26gg

????????????????????????????????????

நாட்டின் 71-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க விஜய கார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றி வைத்து 515 பேருக்கு ரூ.93.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

நாடு முழுவதும் 71-வது குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்து குடியரசு தின பேரணியை பார்வையிட்டார். மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில ஆளுநர்கள் கொடியேற்றி வைத்தனர். சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் டாக்டா் க.விஜயகாா்த்திகேயன், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளையும் அவர்களுடைய வாரிசுகளையும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் மற்றும் பலூன்களையும் ஆட்சியர் பறக்க விட்டார்.

தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு அரசுத்துறைகளின் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பாராட்டினார்.

 

இந்த குடியரசு தினவிழாவில், 515 பயனாளிகளுக்கு ரூ. 93.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வாங்கினார். இந்த விழாவில் திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சய் குமார், மாவட்ட எஸ்பி திஷா மிட்டல் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். விழா முடிவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon