செல்போன் திருடனின் விரலை கடித்துத் துப்பிய இளைஞர்

டெல்லியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவனின் விரலை பாதிக்கப்பட்ட இளைஞர் கடித்து துப்பிய சம்பவம் நடைபெற்றுள்ளது. தேவராஜ் என்பவர் பூங்கா ஒன்றில் அமர்ந்து தனது செல்போனில் தகவல்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அப்போது அவரை அணுகிய இரு நபர்களில் ஒருவர் அவரது வாயை மூடிக்கொள்ள மாற்று நபர் சரமாரியாக தாக்கி செல்போனை பறித்தார். அப்போது தேவராஜ் தனது வாயை மூடி இருந்தவனின் விரலில் ஒன்றை கடித்து துப்பினார். சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே செல்போனுடன் தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply