ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் ஒத்தி வைக்கப்பட்ட 335 பதவிக்கான இடங்களுக்கு வரும் 30-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27, 30 தேதிகளில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாம் பெற்றது. ஜன 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜன.6-ல் பதவியேற்றனர்.
தொடர்ந்து ஜன 11-ந் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.இதில் பல இடங்களில் கவுன்சிலர்கள் கடத்தல், அடிதடி, மோதல் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சிலருக்கு திடீரென உடல் நலக்குறைவு போன்றவை அரங்கேறிய காரணங்களால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இப்படி 335 இடங்களில் மறைமுகத்தேர்தல் ரத்தானது.இந்நிலையில் வரும் 30-ந்தேதி இந்த 335 பதவிகளுக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.