ராமநாதபுரத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
ராமநாதபுரம் நகர் அதிமுக., சார்பில் எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் செயலாளர் எம்.அங்குச்சாமி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன்,
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக., அவைத் தலைவர் செ.முருகேசன், முன்னாள் மாவட்ட துணை செயலர் எஸ்.ராமசேது,
தலைமை பேச்சாளர் மானகிரி கிருஷ்ணன் ஆகியோர் அதிமுக அரசு வழங்கி வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியச்செயலாளர் எம்.அசோக்குமார், கடலாடி ஒன்றிய அதிமுக., துணை செயலாளர் சண்முகபாண்டியன்,
முன்னாள் நகர் செயலர் கே.சி.வரதன்,வார்டு செயலர்கள் ஜி.வீரபாண்டியன் எம்.ஜெயக்குமார், கே.ராதாகிருஷ்ணன், நகர் அம்மா பேரவை செயலர் டி.ஆர். சீனிவாசன், நகர் மகளிரணி செயலர் பி.வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராம்கோ துணை சேர்மன் எஸ்.சுரேஷ் நன்றி கூறினார்.





