தமிழகம், கடந்த 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
தமிழகத்திலும் 70 லட்சம் குழந்தைகளுக்கு இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.தமிழக அமைச்சர்கள் பலரும் தங்கள் மாவட்டங்களில் முகாம்களை தொடங்கி வைத்தனர்.