பழனி முருகன் கோயிலில் ரூ.2.5 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக சுமார் இரண்டரை கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை, புதுவருடபிறப்பு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கோவிலில் உள்ள உண்டியல்கள் 25 நாட்களில் நிரம்பின.

 

இதையடுத்து கார்த்திகை மண்டபத்தில் வைத்து கோவில் உண்டியல்கள் எண்ணப்பட்டன. சுமார் 2 கோடியே 57 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருக்கிறார்கள். 670 கிராம் தங்கமும், 12 ஆயிரத்து 300 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

 

இவை தவிர பித்தளை வேல், நவதானியம், பட்டாடை உள்ளிட்டவைகளும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளன.


Leave a Reply