சி‌ஏ‌ஏ எதிர்ப்பு போராட்ட எதிரொலி – பிரதமரின் அசாம் பயணம் ரத்து

குடியுரிமை திருத்த சட்டஎதிர்ப்புப் போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் மோடி தனது அசாம் பயணத்தை இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளார். அசாமில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு திருவிழா ஹௌகாத்தி நகரில் நாளை தொடங்க உள்ளது.

 

இதனை தொடக்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அசாமில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் எதிரொலியாக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

 

இதன் எதிரொலியாக மோடி தனது பயணத்தை ரத்து செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதே நாளில் மேற்குவங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால் ரத்து செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.


Leave a Reply