ஸ்ரீ சதானந்த மடத்தில் சிறுவர்களுக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை?

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீ சதானந்த மடத்தில் சிறுவர்களுக்கு நிர்வாகிகள் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

அதில் மடத்தில் இருக்கும் மாணவர்கள் சிலருக்கு மேலாளர் ஆனந்த் மற்றும் சம்பத் ஆகியோர் தன்பாலின உறவு வைத்துக்கொள்ள வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த தொல்லையை எதிர்கொள்வதாகவும் ,மறுப்பு தெரிவித்தால் வீட்டிற்கு அனுப்பி விடுவோம் என மிரட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து மடத்தில் இருந்த 9 சிறுவர்களையும் காஞ்சிபுரம் குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் வீடியோ அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


Leave a Reply